News Just In

7/23/2024 08:42:00 PM

"கம்படிஷன் க்ளப்b" இன் முதலாவது வருட பூர்த்தி விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது!



(எம்.எம்.ஜெஸ்மின்)

திறமையானவர்களை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தும் சிறப்பான பணியை "கம்படிஷன் க்ளப்b" ஆனது நாடளாவிய ரீதியில் வழங்கி வருகின்றது. இதனை பொறுத்தமட்டில், பல போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி திறமையானவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி, உற்சாகமூட்டும் வகையில் அவர்களை கெளரவப்படுத்தும் நிகழ்வானது "கம்படிஷன் க்ளப்b" இனுடைய உரிமையாளர் ஸைனப் ஸிம்ஹான் அவர்களின் தலைமையில் கொழும்பு - வெல்லம்பிட்டிய - பெவிலியன் மண்டபத்தில் மிக சிறப்பான முறையில் அண்மையில்(21) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல துறைகளிலும் சாதனை படைத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள், பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக நீர்கொழும்பு விஸ்டம் கல்லூரி உபஅதிபர் சிராஜ் சலீம்,சன்fபிளவர் ஸ்கில் அகடமி உரிமையாளர் மற்றும் தலைவர் முர்சிட் திருமதி. ஹப்ரா முர்சிட்,ஆர்.ஜே மீடியா வலயமைப்பின் பணிப்பாளரும், வானொலி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரும், அறிவிப்பாளருமான ஏ.ம்.இன்சாப்,ஹஸ்மா பிரைடல் & அகடமி உரிமையாளர் திருமதி. ஹஸ்மா மாலிக்,பாfஸ்z பிரைடல் & மெகந்தி அகடமி உரிமையாளர் திருமதி. அஸ்மா பாயிஸ் முதலானவர்கள் பங்கேற்றதுடன், பெற்றோர்கள், வெற்றியாளர்கள், மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

No comments: