News Just In

7/26/2024 10:41:00 AM

திருகோணமலை வரோதய நகர் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 32 வயது யுவதியொருவரின் சடலம் உப்புவெளி பொலிஸாரினால் மீட்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரோதய நகர் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வியாளக்கிழமை மாலை உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு சென்ற உப்புவெளி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த யுவதி 2023 ஆம் ஆண்டு நோர்வே நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து திருகோணமலையில் திருமணம் முடித்தவராவார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வரோதய நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய றினா ஸ்ரீலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பாக உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: