News Just In

6/05/2024 07:58:00 AM

சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் உட்பட பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கதி - கடும் ஆத்திரத்தில் மக்கள்!



சமூகவலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில் சிறுவனை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை புல்மூட்டை அரிசிமலை பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட நபரும் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான நான்கரை வயதுடைய சிறுவன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறுவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பல சமூக ஊடக பயனர்கள் பொலிஸாரை வலியுறுத்திய நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றது.

No comments: