News Just In

6/07/2024 06:02:00 AM

இளைஞர்களின் தேவைகளை நிவர்த்திக்க முடியாத தூர நோக்கற்ற அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவோம் - சுபைதீன் பெளண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் முஹம்மட் பிர்தெளஸ்!



(ஏ.எம்.அஜாத்கான்)

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மக்களுக்காக சமூக சேவையாற்றிவரும் நாபீர் பௌண்டேசன், அரசியல் அதிகாரத்துடன் மக்களின் தேவையறிந்து சேவையாற்றுவது காலத்தின் தேவையாகுமென சுபைதீன் பெளண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் முஹம்மட் பிர்தெளஸ் தெரிவித்துள்ளார்.

சுபைதீன் பௌண்டேசன் அமைப்பின் நிர்வாக சபைக் கூட்டம் சாய்ந்தமருதில் இன்று (06) இடம்பெற்றது.

இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தனதுரையில்,

நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் சமூக சிந்தனையாளரும் பொறியியலாளருமான உதுமாங்கண்டு நாபீர் ஒரு சிறந்த சமூக சேவையாளராவார்.

இவர் தனது சொந்த நிதியிலிருந்து எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பல்வேறு சேவைகளை கிழக்கு மாகாணம் பூராக இன மத பேதமின்றி செய்து வருகின்றார். இவருக்கு அரசியல் அதிகாரம் இருக்குமாக இருந்தால் மேலும் அதிகாரத்துடன் கூடிய எமது மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவு செய்வதற்கான சந்தர்ப்பம் இவருக்கு கிடைக்கும். அதனால் எதிர் வருகின்ற தேர்தல்களில் இவரையும், இவர் சார்ந்தவர்களையும் அதிகாரத்தில் அமர்த்தி அவர்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்கும்போது எமது பிரதேசம், எமது சமூகம் மேலும் இவர் ஊடாக பல்வேறு அபிவிருத்திகளையும் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எமக்குண்டு.

இப்போது இளைஞர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் தொழில் ஒன்றை தேடிக்கொள்வது, இவ்வாறான முக்கிய வாழ்வாதார தேவை ஒன்றுக்காக இளைஞர்களை வழிகாட்டக்கூடிய தலைமைகள் எங்கள் மத்தியில் இல்லாதது பெரும் குறையாகும். இதன்காரணமாகவே இவர்கள் தவறான முடிவுகளுக்குள் உந்தப்படுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கிவரும் நாபீர் பௌண்டேசன், தனது கால்களை அகலவிரித்து பணியாற்ற திட்டமிட்டுள்ளது. இதனூடாக சிறந்த வேலையாட்கள் அணியை உருவாக்கி சர்வதேச தொழில் சந்தையில் வேண்டப்படும் தொழில்களில்களுக்கு தகுதியானவர்களை இப்பிராந்திய இளைஞர்களில் இருந்தே உருவாக்க முனையும் தூர நோக்கு சிந்தனை இவரிடம் உண்டு.

இளைஞர்களினதும் நமது பிரதேசத்தினதும் தேவைகளை நிவர்த்திக்கும் அளவுக்கு அரசியல்வாதிகள் நமது பிரதேசத்தில் இருக்கின்ற போதிலும் இவர்கள் கண்களை மூடிக்கொண்டிருப்பது இப்பிராந்திய மக்களின் துரதிஸ்டமாகும். தொடர்ந்தும் இவர்களுக்கு இடமளியாது பிராந்தியத்தின் நன்மை கருதி நாபீர் பௌண்டேசன், தனது சார்பில் பிராந்தியத்தின் மீது அக்கறையுள்ள சிறந்த அரசியல் தலைமைகளை களத்தில் இறக்கும் நிலை உள்ளது. மக்கள் சேவைக்காக துடிப்புள்ளவர்களை அரசியல் களத்தில் இறக்குமாறும் ஆதரவு வழங்க நாம் தயாராக உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எமது இளைஞர் யுவதிகளின் கல்வி, தொழில்வாய்ப்பு விடயங்களில் பாரிய முன்னெடுப்புக்கள் எதிர்காலத்தில் நாபீர் பெளண்டேசன் ஊடக முன்னெடுக்கப்படும் இதனுடாக எமது இளைஞர்கள் தன் சொந்தக்காலில் நிற்கக் கூடிய நிலையை ஏற்படுத்த முனையும் நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகர் பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீரின் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments: