News Just In

6/26/2024 10:42:00 AM

சட்ட மா அதிபராக மீண்டும் சஞ்சய் ராஜரத்தினம்!

ஜனாதிபதி விசேட அனுமதி!



சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விசேட அனுமதியை வழங்கியுள்ளார்.
சட்ட மா அதிபரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது .

அதேசமயம் ஏற்கனவே அவருக்காக ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசை நிராகரித்த அரசியலமைப்பு சபை இன்று விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது.

இந்த பின்னணியிலேயே அரசியலமைப்பு சபையின் முடிவை புறந்தள்ளி ஜனாதிபதி ரணில், சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

No comments: