அண்மையில் வெலிஓயா பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சிறுமியை கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
குகுல் சமிந்த என்பவர் தாக்கிய காணொளியே இவ்வாறு பரவியது.
இந்நிலையில் குகுல் சமிந்தவின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சிறுமியை தாக்கியதை காணொளியில் பதிவு செய்த இளைஞருக்குநேற்று (12) பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விசேட பணப்பரிசு வழங்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் தருஷ சந்தருவன் கொடிகார என்ற இளைஞரின் செயற்பாடு பாராட்டப்பட்டது.
அவரது காணொளியின் வாயிலாக குகுல் சமிந்த கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும்19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட சிறுமி தற்போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பொறுப்பில் உள்ளார்
No comments: