இலங்கையின் வலைப்பந்தின் பெருமையை சர்வதேசம் வரை கொண்டு செல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த தர்ஜினி சிவலிங்கம் நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
ஆசியாவின் உயரமான வலைப்பந்து வீராங்கனை (208CM) என்ற பெருமைக்குரிய தர்ஜினி யாழ்ப்பாணம் மாவட்டம், புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த தமிழ் பெண்மணியாவார்.
தர்ஜினி சிவலிங்கத்துக்கு நேற்று சென்னை நியூ ஐலண்ட்ஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. தமிழகத்தின் தென்திருப்பேரையில் வசிக்கும் தொழிலதிபர் ஆர். பிரசாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
45 வயதான 6 அடி 10 அங்குல உயரமான தர்ஜினி சிவலிங்கம், இலங்கை தேசிய வலைப்பந்து அணியிலிருந்து கடந்த வருடம் தனது ஓய்வினை அறிவித்திருந்தார்.
’
No comments: