
அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தில் இன்று(18) கூடவுள்ளது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு மேலும் ஒருவருட சேவை நீடிப்பு வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பு பேரவை அண்மையில் கூடியிருந்த போதிலும், சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு ஒருவருட சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை செய்துள்ளார்
No comments: