News Just In

5/16/2024 06:58:00 PM

கோடையில் ஒருநாள் குளிர் வரலாம்... கூடவே இரண்டு வானவில்லும்!




வானவில் வளைக்காத மனங்கள் உண்டோ! அதன் வண்ண வீச்சு அவ்வளவு அழுத்தமானதாயிற்றே! பார்த்தவுடன் பரவசத்தைப் பாய்ச்சும் வானவில்லை ஒவ்வொருமுறையும் குழந்தையின் மனம் கொண்டே பார்போர் தான் அதிகம். ஒற்றை வானவில்லையே அப்படி உற்று உற்று பார்க்கும் கண்களுக்கு ‘டபுள் பொனான்சா’ போல் இரட்டை வானவில் காணக் கிடைத்தால் எப்படியிருக்கும்!

அதுவும் கொளுத்தும் கோடையில் திடீரென பெய்த மழையின் ஊடே அந்தக் காட்சி ‘சட்டென மாறுது மனநிலை’ என்று சொல்லும் அளவுக்கு காதலையும், கவிதையையும் கொண்டுவரும்தானே. எங்கோ தூரத்தில் இருக்கும் உறவை நினைத்துக் கொள்ளத் தூண்டும் விதத்தில் ‘கோடையில் ஒருநாள் குளிர் வரலாம்... கூடவே இரண்டு வானவில்லும் வரலாம்!’ என்று ரசனை கொள்ள வைத்தது அந்த இரட்டை வானவில்.



சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே கோடை மழை என்னுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரட்டை வானவில் என்னைப் போன்ற சென்னை வாசிகள்  முகத்தில் புன்னகையை மலரச் செய்துவிட்டுச் சென்றது.

No comments: