நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லும், டிபி எடியூகேசன் இலவச கணிணி கல்வி மையம் வேலைத்திட்டத்தின்கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திலும் புதிய கிளைகள் இன்று திறந்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு ஏறாவூரில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும்
நிகழ்வில் பங்கேற்றனர்.
மட்டக்களப்பு ஓட்டமாவடியிலும் இன்று காலை டிபி எடியூகேசன் இலவச கணிணி கல்வி மையம், நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவால்
திறந்து வைக்கப்பட்டது.மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா,கிழக்கு மாகாண முன்னாள்ஆளுநர்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.

காத்தான்குடியிலும் எடியூகேசன் இலவச கணிணி கல்வி மையத்தை, நாடாளுன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா திறந்துவைத்தார்.இலவச கல்வியைப் பயிலவுள்ள மாணவர்களுக்கான அனுமதியட்டைகளும் இன்று வழங்கப்பட்டன.நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி பிரதேச செயலாளர்உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்
No comments: