News Just In

5/29/2024 05:50:00 AM

ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பிற்போடும் நோக்கம் இல்லை – ஜனாதிபதி தெரிவித்ததாக ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவிப்பு!




ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பிற்போடுவதற்கான யோசனையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து கருத்து தெரிவித்ததை தொடர்ந்து அரசியல் வட்டாரங்கள் நேற்று பெரும் குழப்பநிலை காணப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரின் அறிவிப்பை முற்றாக நிராகரித்ததுடன் ஜனாதிபதி உடனடியாக பதிலளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

நேற்று மாலைக்குள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை பலர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர்,இவர்களில் பலர் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியை தொடர்புகொண்ட எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரின் அறிக்கைn குறித்து மேலும் விளக்கங்களை தெளிவுபடுத்தல்களை கோரினர்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி தனது கட்சியின் பொதுச்செயலாளரின் அறிவிப்பிலிருந்து தன்னை தனிமைப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டது , தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்;சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை தனது சார்பில் கருத்துக்களை வெளியிடுமாhறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஏன் அவ்வாறான அறிக்கையை வெளியிட்டார் என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதிக்கு நெருக்கமான ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் , அந்த அறிக்கையை நிராகரித்துள்ளதுடன்,சர்வஜனவாக்கெடுப்பை நடத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஜனநாயக விழுமியங்களை பின்பற்றுவார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பாலித ரங்க பண்டாரவின் தனிப்பட்ட அறிக்கை என ரவிகருணாநாயக்க டெய்லிமிரருக்கு தெரிவித்துள்ளார்.

இது ஜனாதிபதியின் தீர்மானம் இல்லை என அவர் குறிப்பி;ட்டுள்ளார்

No comments: