ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா(இன்று(01)கொழும்பு கோட்டையில் நடைபெற்ற கட்சியின் மே தின பேரணியில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பொன்சேகா பேரணியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பௌத்த மதகுருமார்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்னமற்றும் தலதா அத்துகோரள ஆகியோர் இன்று கோட்டையில் நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீனும் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களில் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு முன் இருக்கைகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: