News Just In

5/02/2024 05:34:00 AM

ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத் தீர்மானம்!



தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதும் சிந்திப்பதும் செயல்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் 30/04/2024 அன்று வவுனியா வாடி வீடு விடுதியில் ஒன்று கூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர்.

01. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறையாண்மையையும் சுய நிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2. ஸ்ரீலங்காவில் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத் தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

03. அதற்கமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.

4. அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொது கட்டமைப்பை உருவாக்குவது.

05. தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளின் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புகளை நோக்காக கொண்டு செயல்படுவது.

ஒப்பம் வணக்கத்திற்குரிய ஆயர் திருகோணமலை மறை மாவட்டம்.

தவ திரு அகத்தியர் அடிகளார் தென்கலயாதீனம்.

தவத்திரு வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம்

No comments: