News Just In

4/16/2024 08:00:00 PM

பாலித்த தெவரப்பெரும காலமானார்!



முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார்.

இன்று பிற்பகல் அவர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

64 வயதுடைய பாலித்த தெவரப்பெரும ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அவர் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: