News Just In

4/05/2024 03:13:00 PM

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வீழ்ச்சிக்கு மைத்திரியே காரணம்…!




ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்காக கூட்டணி அமைப்பதற்கான சந்தர்ப்பம் பல தடவைகள் கிடைத்த போதிலும் அதனை கட்சியின் தவிசாளர் நிராகரித்திருந்ததாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் நாம் மீண்டும் எமது பதவி நிலைகளில் நீடிக்கின்றோம். அரசியலமைப்புக்கு முரணாகவே கட்சியில் இருந்து எம்மை நீக்கினர்.

எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் கட்டியெழுப்பப்பட்ட எமது கட்சிக்குள் ஒரு கட்டத்தில் பலவித முரண்பாடுகள் ஏற்பட்டன.

இதனை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையார் இன்று நீதிமன்றத்தை நாடினார்.

ஏனென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இனியும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்வதை அவர் விரும்பவில்லை.அதன்பிரகாரம் கட்சியின் தவிசாளர் பதவியில் மைத்திரிபால தொடர்ந்தும் நீடிப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: