News Just In

4/03/2024 10:53:00 AM

காஸாவுக்கு நிதி வழங்கிய அல்- ஹிலாலில் இஃப்தார் நிகழ்வும் நடைபெற்றது : கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.!


நூருல் ஹுதா உமர்

கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலயத்தில் விசேட இப்தார் நிகழ்வு 2024.04.02 திகதி பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் அவர்களின் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மத்தியில் சமய விழுமியங்களைப் பேணும் எண்ணப்பாங்கினை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜிம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், கல்முனை மாநகர கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், அரச உயர் அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நோன்பின் மகத்துவம் தொடர்பான சொற்பொழிவினை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆசிரியர் மௌலவி ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்கள் நிகழ்த்தினார். சிறப்புரையை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜிம் அவர்கள் நிகழ்த்தியதோடு, நன்றி உரையினை பாடசாலையின் பிரதி அதிபர் நிகழ்த்தினார். இந்த பாடசாலை அண்மையில் காஸா சிறுவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்திற்கும் நிதி வழங்கி இருந்தமை விஷேட அம்சமாகும்.

No comments: