News Just In

3/31/2024 03:23:00 PM

கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவரின் பங்கேற்புடன் இடம் பெற்ற இப்தார் நிகழ்வு.



நூருல் ஹுதா உமர்

கத்தாரிலுள்ள இலங்கை சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மலபார் கோல்ட் டைமோன்ட் நிறுவனத்தின் முழு ஆதரவுடன் கத்தார் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கான வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் புனித இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு நேற்று(30) இடம் பெற்றது.

இலங்கை சமூக அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் அஹமத் றிசாத் தலைமையில் கத்தார் நியூ ஸலாத்தா அல்-அரபி விளையாட்டு அரங்கில் இவ்வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் பங்கேற்று சிறப்பித்தார்.

நிகழ்வில் கத்தார் உள்துறை அமைச்சின் பிரதிநிதி பைசல் அல்-ஹூதாவி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர். இவ் இப்தார் நிகழ்வில் அதிகளவிலான இலங்கையர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: