எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் 20K6ம் ஆண்டு சாதாரண தர பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாகத்தெரிவும் இப்தார் நிகழ்வும் கடந்த 29.03.2024ம் திகதி வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள அஸ்லம் அவர்களின் கடை வளாகத்தின் பி.ப 5.30 மணி முதல் இடம்பெற்றது.
முன்னாள் நிர்வாக சபைத்தலைவர் மற்றும் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், வாழைச்சேனை அந்நூரியன்ஸ்’ 20K6 அமைப்பின் அங்கத்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் மௌலவி MTM.நபீல் அவர்களின் விசேட உரை இடம்பெற்றதுடன், மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து புதிய நிருவாகத்தெரிவு முன்னாள் நிர்வாகத்தலைவர் A.சிபான் தலைமையில் இடம்பெற்றது.
தலைவராக மௌலவி MTM.நபீல், செயலாளராக HMM.றிஸ்வான், உப தலைவராக மௌலவி M.சதாம், உப செயலாளராக KLM.ஹம்சீரின், பொருளாளராக A.G.அஸ்லமின், உப பொருளாளராக A.M.அஸ்லமின் ஆகியோரும்
1- Y.B அரபாத்
2- MNM.முபீன்,
3- மௌலவி அஸீம்
4-SIM.நிப்ராஸ்
5-SM.சிஹாப்தீன்
6-RM.சியாம்
7-AG..அஸ்லம்
8-MHM.இம்ரான்
9-அஸ்வர்
10-A.சிபான் ஆகியோர் நிர்வாக உறுப்பினர்களாகவும் மௌலவி SKM.றிஸ்வான் விளையாட்டுத்துறை பொறுப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய செயலாளரினால் புதிய நிருவாகத்தின் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், பழைய நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நண்பர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் தொடர்பில் புதிய தலைவரினால் விசேட உரையாற்றப்பட்டதுடன், தேவையுடைய நண்பர் ஒருவருக்கு ஏராளமானோர் தாமாக முன்வந்து உதவிகளைச் செய்திருந்தனர்.
No comments: