News Just In

3/17/2024 09:02:00 AM

போரின்போது ஆட்டத்தை மாற்றக்கூடிய அக்னி 5 ஏவுகணையின் முதல் புகைப்படம் வெளியீடு!






புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் எம்ஐஆர்விதொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை ஒடிசாவில்அண்மையில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு உள்ளது. இது 5,000 கி.மீ. தொலைவு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஆனால் இந்த ஏவுகணை 8,000 கி.மீ. வரை சீறிப் பாயும் என்று சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே எம்ஐஆர்வி ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளது. இந்தபட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இதுகுறித்து டிஆர்டிஓ வட்டாரங்கள் கூறியதாவது: எம்ஐஆர்வி தொழில்நுட்பத்தில் ஏவப்படும் ஏவுகணைகள் அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணைகள் காற்று மண்டலத்தை தாண்டி வெளியே சென்று மீண்டும்கீழ் நோக்கி பாயும்போது பூமிதனது அச்சில் சற்று சுழன்று விட்டிருக்கும். இதை கணக்கில் கொண்டால் மட்டுமே இலக்குகளை குறிதவறாமல் தாக்க முடியும்.இதற்கேற்ப ஏவுகணையில் பொருத்தப்பட்டிருக்கும் கணினியில் தாக்க வேண்டிய இலக்குகளின் வரைபடங்கள் காட்டப்பட்டிருக்கும்.

இந்த ஏவுகணையில் 12 அணுகுண்டுகள் வரை சுமந்து சென்று12 இலக்குகளை தாக்கி அழிக்கமுடியும். இதன் மூலம் சீனாவின் எந்த பகுதி மீதும் தாக்குதல் நடத்த முடியும். அக்னி 5 ஏவுகணையை நடுவானில் இடைமறித்து தாக்கி அழிப்பது மிகவும் கடினம். அதிகபட்சமாக ஒரு அணுகுண்டை வேண்டுமானால் நடுவானில் இடைமறித்து அழிக்க முடியும். இதர 11 அணுகுண்டுகள் நிச்சயிக்கப்பட்ட இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும். இவ்வாறு டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போரின் ஆட்டத்தையே மாற்றிஅமைக்கும் திறன் படைத்தஇந்த அக்னி 5 ஏவுகணையின் முதல்புகைப்படத்தை பாதுகாப்புத் துறைநேற்று வெளியிட்டது. இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments: