News Just In

3/09/2024 08:17:00 PM

இலங்கையில் 40% பெண்கள் செனிட்டரி நெப்கின் பயன்படுத்துவது இல்லை!




இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதை 40% பெண்கள் நிறுத்தியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய செனிட்டரி நெப்கின்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியதே இதற்கான முக்கிய காரணம் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்களுக்கான அனைத்துப் சுகாதாரப் பொருட்களுக்குமான விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களின் அளவைக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகினறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட 40% பெண்கள் செனிட்டரி நெப்கின் பாவனையை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments: