News Just In

3/11/2024 01:37:00 PM

மட்டக்களப்பில் 2 MW சூரிய மின் சக்தி திட்டம்!




மட்டக்களப்பில் தரையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம் நேற்று (10) காலை திறந்து வைக்கப்பட்டது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இது இலங்கை மின்சார சபையின் 90 மெகாவொட் ஒப்பந்த நடைமுறையின் கீழ் கட்டப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது X கணக்கில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

BackBay Solar தனியார் நிறுவனத்தினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

No comments: