
தென் மாகாண அரச பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், அதே பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிட்டு மேலதிக வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்று நிருபம் எதிர்வரும் தினங்களில் வெளியிடப்படும் என தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலிகமகே தெரிவித்தார்.
தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், சுற்று நிருபத்தை கவனிக்காது இவ்வாறு பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிட்டு மேலதிக வகுப்புகள் நடாத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படும். தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களாயின், அவர்கள் சம்பந்தமாக கல்வி அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்படும். இது விடயமாக கவனிக்க தனியான குழுவொன்றும் தயார்படுத்தப்படும்.
இது சம்பந்தமான சுற்று நிருபத்தை வெளியிடுமாறு தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாகவும், வெவ்வேறு இரண்டு மாகாணங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments: