News Just In

2/27/2024 02:20:00 PM

நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான செய்தி!



நீர் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (26.02.2024) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்த நீர் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

No comments: