ஆவா குழுவினை இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் அங்கத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபரே நேற்று (06.02.2024) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தான் அந்த குழுவில் இரண்டு வருடங்களாக அங்கத்தவராக இருப்பதாக குறித்த சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
குழுவின் இலச்சினை
அதேவேளை, ஆவா குழுவின் இலச்சினையில் உள்ள '001' என்ற எண்ணுக்கான விளக்கம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இலச்சினையை உருவாக்கியவர்கள் சன்னா மற்றும் தேவா என்ற இருவரே எனவும் அவர்கள் இப்போது வெளிநாட்டில் வசிக்கிறார்கள் எனவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.
No comments: