மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நவீன ரக கைக்குண்டொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த கைக்குண்டு இன்றையதினம் (07.01.2024) மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சின்ன உப்போடை வாவிக்கு அருகாமையில் உள்ள குப்பைகளை கொட்டும் இடத்திலேயே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: