
அமெரிக்காவில் இருந்து கனடா – Ontario இற்கு புறப்பட்ட அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737-9 மேக்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் கதவுகளில் ஒன்று நடுவானில் திறக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைத்தனர்.
இன்றையதினம் அமெரிக்காவின் போர்ட்லாண்ட் என்ற இடத்தில் இருந்து கலிபோர்னியாவின் ஒன்டரியோ நகரை நோக்கி பறந்த #Alaska airlines போயிங் 737-9 MAX விமானத்தின் கதவுகளே இவ்வாரு திடீரென திறந்துகொண்டது.
பயணிகளால் எடுக்கப்பட்ட காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பகிர்ந்த காணொளிகளில் , விமானத்தில் இருந்து மிட் கேபின் வெளியேறும் கதவு முற்றிலும் பிரிந்திருப்பதைக் காட்டுகிறது.
அலாஸ்கா வெளியிட்ட அறிவிப்பு
“AS1282 போர்ட்லேண்டில் இருந்து ஒன்டாரியோ, CA (கலிபோர்னியா) க்கு இன்று மாலை ஒரு சம்பவத்தை சந்தித்தது. இந்த சம்பவம் தொடர்பில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
விமானம் 171 விருந்தினர்கள் மற்றும் 6 பணியாளர்களுடன் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.
No comments: