மட்டக்களப்பில் போதை பொருள் கடத்தல் காரர்களை தேடி நகருக்குள் நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நடவடிக்கையானது நேற்று (05.01.2024) அதிகாலை 2 மணியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு வீதியிலுள்ள மடடக்களப்பு மாநகர வரவேற்று கோபுரத்துக்கு அருகில் நகருக்குள் உள் நுழையும் தனியார் சொகுசு பேருந்துகள், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்கள், முச்சக்கரவண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சோதனை நடவடிக்கை காலை 6 மணிவரை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேகத்துக்கு இடமாக பயணித்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: