News Just In

1/07/2024 06:49:00 AM

ஜனாதிபதியுடன் பேசி பலனில்லை: சந்திப்பை நிராகரித்த ஆறு திருமுருகன்!



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகளுக்கு எந்தவித ஆக்கபூர்வமான தீர்வும் வழங்கப்படவில்லை என்பதனால் இனியும் ஜனாதிபதியுடன் பேசி பயன் இல்லை என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் காரணமாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தேன் எனவும் கூறியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனத்தில் நல்லை ஆதீன குரு முதல்வருடன் என்னையும் சந்தித்திருந்தார்.



அதன் போது பல விடயங்களை நாங்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தோம்.

அவற்றை உடனடியாகவே செயற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அதில் எந்த விடயமும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

அதன் காரணமாகவே யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை.”

No comments: