News Just In

1/30/2024 08:16:00 AM

கல்முனை பிரதேச செயலகத்தினால் மீனவர் வாடி உத்தரவு பத்திரம் வழங்கி வைப்பு!

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 14 மீனவர்களுக்கான வாடி உத்தரவு பத்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று(29) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு தலைவருமான எஸ்.எம்.எம்.முஷாரப்,கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(சர்ஜுன் லாபீர்)

No comments: