நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வார்த்தைப் பிரயோகங்களும், விமர்சனங்களும் தான் தமிழரசுக் கட்சிக்கு சாபக் கேடாக அமைந்தது என்று மூத்த ஊடகவியலாளரும் தமிழரசுக் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினருமான திருமலை நவம் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்டத்தை தவிர்த்து எங்களது அரசியல் போராட்டத்தை நாங்கள் கொண்டு செல்ல முடியாது. விடுதலைப் புலிகளின் தியாகத்தை நாங்கள் மதிக்காமல், அவர்களின் வரலாற்றை நாங்கள் எழுதாமல் அதை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுச் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்று சொன்ன காரணத்தினாலும் அது போன்ற காரணங்களினாலும் தான் இன்று நாங்கள் மிக மோசமான நிலையை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் திருமலை நவம் சுட்டிக்காட்டினார்.
No comments: