நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை 15 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 1ம் இடத்தினையும், 17வயதிற்குட்பட்ட பிரிவில் 2ம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில் கடந்த 2ம் மற்றும் 03ம் (2023/12/02,03) திகதிகளில் கந்தளாய் மத்திய கல்லூரியில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டே அவர்கள் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளனர். மேலும், அதிக போட்டிகளில் வெற்றி பெற்று 17 வயதுப்பிரிவில் ஐ.எம். சம்லி சாஹி, எம். இசட். எம்.சானிப், ஏ.எஸ்.எம். மிஜ்வாத் மற்றும் 15 வயதுப் பிரிவில் ஐ.எம்.எம் ஆக்கில் கான், எம்.ஜெ.ஐ. சஹ்மி, ஏ.ஏ. பர்வீஸ் ஆகியோரும் Board Champion ஆக தெரிவு செய்யப்பட்டனர்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் சுஹ்தான் ஆகியோரையும் அதிபர் எம்.ஐ. ஜாபீர் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
No comments: