News Just In

12/22/2023 02:55:00 PM

சமகி ஜன பலவேகயவின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் போதைப்பொருளுடன் கைது!




போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சமகி ஜன பலவேகய மாவட்ட அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அமித பண்டார கைது செய்யப்பட்டதையடுத்து அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதுடன் மாவட்ட அமைப்பாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

இதேவேளை, அமித பண்டார நேற்றையதினம் கைது செய்யப்படும்போது அவரிடம் இருந்து போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, இன்று நடைபெறும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments: