News Just In

12/30/2023 12:09:00 PM

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!



இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.



குறித்த நிலநடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் இன்று (30) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.


இணைப்பு 2

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!
இந்து சமுத்திரத்தில் இன்று (30) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

No comments: