News Just In

12/25/2023 03:55:00 PM

மட்டக்களப்பு சிறையில் இருந்து 45 கைதிகள் விடுதலை!



 நத்தார் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 2 பெண் கைதிகள் உட்பட 45 கைதிகள் இன்று திங்கட்கிழமை (25) காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர்.

விடுதலை செய்யப்பட்ட கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நன்றி செலுத்திய பின்னர் வீடுகளுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: