முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் பணிப்பாளராக நௌபீஸ் நியமனம்
A.H.HASFAR HASFAR
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் புதிய பணிப்பாளராக என்.எம்.நௌபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனக் கடிதத்தை மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க இன்று (12) திருகோணமலையில் உள்ள மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.இலங்கை நிருவாக சேவை அதிகாரியான இவர் முன்னால் மாகாண விளையாட்டு பணிப்பாளர்,கிண்ணியா ஏறாவூர் நகர சபைகளின் செயலாளராகவும்,சிறுகைத்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்,மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகிய பதவிகளில் முன்னர் திறம்பட கடமையாற்றியுள்ளதுடன் பொதுத் துறை நிருவாகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்றுள்ளதுடன் சட்ட இளமாணி கற்கையினையும் தற்போது பயின்று வருகிறார்
.
மட்டக்களப்பு ஏறாவூரை சேர்ந்த இவர் அரச திணைக்களங்களின் உயர் பதவிகளில் தனது நிருவாக சேவைகளை திறம்பட செய்துள்ளார்.
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வில் ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
A.H.HASFAR HASFAR
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வில் ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
A.H.HASFAR HASFAR
No comments: