News Just In

8/28/2023 09:23:00 PM

நீண்ட வறட்சியின் பின்னர் மட்டக்களப்பில் இன்று மழை!





மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது.

கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

வறட்சி நிலைய காரணமாக விவசாயிகளும் தோட்டச்செய்கையாளர்களும் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வந்தனர்.

அத்துடன் உஸ்ணமான காலநிலை காரணமாக பெரியவர்களும் சிறியவர்களும் சிரமங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழைபெய்வதை காணமுடிகின்றது.

சில இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்வதன் காரணமாக மக்களை அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

எனினும் நீண்டகாலத்தின் பின்னர் கடுமையான வறட்சியான காலநிலைக்கு மத்தியில் இன்று மழைபெய்வதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


No comments: