News Just In

8/09/2023 10:35:00 AM

சிறுவனை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் சாஜனுக்கு விளக்கமறியல்!




மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் 16 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஓய்வு பெற்ற பொலிஸ் சாஜனை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் 07 ஆம் திகதி உத்தரவிட்டார்.

பொலிஸ் சாஜன் சம்பவ தினமான கடந்த சனிக்கிழமை பள்ளிவாசல் ஒன்றிற்கு சென்ற சிறுவன் ஒருவனை அப்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் பொதுமக்கள் மடக்கி பிடித்து அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பொலிஸ் சாஜன் கடமையாற்றி வந்த காலங்களில் இவ்வாறன சம்பவங்கள் தொடர்பாக வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வந்த நிலையில் அண்மையில் ஓய்வு பெற்றவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

No comments: