News Just In

8/09/2023 07:41:00 AM

கொழும்பில் வாகனம் வைத்திருப்போருக்கு கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு நகரில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சீருடை அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டை இன்றி பணம் சேகரிக்க வரும் நபர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

வாகன நிறுத்துமிடங்களில் அனுமதியற்ற பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு மாநகர சபை பிரதிப் பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திய பின்னர் 5 நிமிட அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகனம் நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறும் போது பணம் வசூலிக்கும் நபர்கள் இல்லை எனில் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: