News Just In

7/12/2023 07:59:00 AM

மட்டு.திக்கோடை பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுள்வேத மத்திய மருந்தக திறப்பு விழா!

மட்டக்களப்பு - திக்கோடை பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுள்வேத மத்திய மருந்தக திறப்பு விழா நாளை 2023.07.12 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் எம்.செந்தில் தொண்டமானினால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாகவும், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கணகமுத்து கிரிஷ்னப்பிள்ளை, வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், ஆகியோர் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணன், புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் (திருமதி) ஜே.பாஸ்கரன், நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ஏ.நபீல், மாகாண சுதேச மருத்துவ திணைக்கள திட்டமிடல் பிரிவு வைத்தியர் எஸ்.சிவச்செல்வன் உள்ளிட்ட வைத்தியர்கள் மற்றும் மாகாண சுதேச மருத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ், மாகாண விஷேட செயற்பாடுகளுக்காக குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடையில் (PSDG) ரூபா. 13 மில்லியன் செலவில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மேற்பார்வையோடு மட்டக்களப்பு - திக்கோடை பிரதேசத்தில் ஆயுர்வேத மத்திய மருந்தகம் புதிதாக அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா

No comments: