News Just In

7/10/2023 11:53:00 AM

ஒரு கோர விபத்தில் குழந்தை பலி! மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதியில் சம்பவம் !

 ஒரு கோர விபத்தில் குழந்தை பலி!


மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதி தன்னாமுனையில் முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (09) பிற்பகல் வேகக் கட்டுப்பட்டை மீறி வீதியில் தடம் புரண்டு வாவிகரை கட்டுடன் மோதிய விபத்தில் ஒரு வயதும் 3 மாதம் கொண்ட குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி, பாமுனையைச் சேர்ந்த ஒரு வயதும் மூன்று மாதங்களுமுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதான வீதி தன்னாமுனையில் வேககட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்டு வாவிகரை கட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து கீழே வீழ்ந்த குழந்தை மீது முச்சக்கர வண்டி ஏறியதையடுத்து குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் குழந்தையின் தாய், உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: