News Just In

7/09/2023 12:18:00 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்காக மோட்டார் போக்குவரத்து துறை உதவி கமிஷனர், தலைமை மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர், டாக்டர் ஆகியோர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

No comments: