News Just In

7/07/2023 03:23:00 PM

யானையால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டயீடு வழங்கி வைப்பு.!

யானையால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டயீடு வழங்கி வைப்பு.



நூருல் ஹுதா உமர்.

கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் காட்டு யானைகளின் தாக்கத்தினால் சொத்தழிவுக்குள்ளாகிய காரைதீவு-10 மற்றும் காரைதீவு-11 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் 06 பயனாளிகளுக்கான நஷ்டஈட்டுக் கொடுப்பனவுக்கான ரூ.217,000.00 ற்கான காசோலைகள் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்களினால் இன்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.


No comments: