பங்களாதேஷின் - பரிஸ்ஹல் மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை(22) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
“இறந்தவர்களில் எட்டு பெண்களும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். காயமடைந்தவர்களில் 45 பேர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்” என்று மாவட்ட காவல்துறை அதிகாரி அஃப்ருசுல் ஹக் டுடுல் தெரிவித்தார்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியோரத்தில் இருந்த ஆற்றுக்குள் பாய்ந்ததால் இந்த விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 45 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் அதிக சுமை ஏற்றப்பட்டதால் இந்த விபத்து சம்பவித்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் கடந்த சில வருடங்களாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் அதிகரித்து வருகிறது. பங்களாதேஷ் வீதிப் போக்குவரத்து ஆணையத்தின்படி, ஜூன் மாதத்தில் இடம்பெற்ற 562 வீதி விபத்துகளில் நாடு முழுவதும் குறைந்தது 504 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 785 பேர் காயமடைந்துள்ளனர்.
No comments: