இலங்கை உயர்தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம்
(சிலியேட்-SLIATE)- மட்டக்களப்பு
(Sivakumaran Selliah) |
அரசாங்க உயர் தொழிநுட்பவியல் நிறுவகமான மட்டக்களப்பு சிலியேட்டில் புதிய மாணவர் சேர்க்கை தற்போது இடம்பெற்று வருகிறது.
பிரதான வீதி, கோவில் குளம், ஆரையம்பதி எனும் முகவரியில் அமைந்துள்ள குறித்த கல்வி நிறுவகத்தால் கணக்கீடு, தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய துறைகளில் அரச அங்கீகாரம் கொண்ட உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளை தொடர விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றின்படி பல்கலைகழக வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கான ஒரு சிறந்த மாற்று கற்கை நிறுவகமே மட்டக்களப்பு சிலியேட் (SLIATE) ஆகும்.
பல்கலைகழகம் போலவே இங்கும் அனைத்து கற்கைநெறிகளும் இலவசமாக போதிக்கப்படுவதுடன் மகாபொல புலமைப்பரிசில் மற்றும் பருவகால பயணசீட்டு போன்ற சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிறுவகத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளை முடித்து வெளியேறுவோர் ஆசிரிய நியமணம் உட்பட பல்வேறு அரச பதவிகளில் உள்வாங்கப்படுவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் உயர் கல்வியை பயிலும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
இதேவேளை, பணிக்கு செல்பவர்கள் குறித்த கற்கைநெறிகளுக்கு கட்டணம் செலுத்தி சனி ஞாயிறு தினங்களில் பயிலும் வாய்ப்பும் இங்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு SLIATE இல் உள்ள கற்கைநெறிளும் அவற்றின் நுழைவுத் தகமைகளும்
01) கணக்கீட்டில் உயர் தேசிய டிப்ளோமா (HNDA)
இது 04 வருடகால கற்கைநெறியாகவும் இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைகழக பட்டத்திற்கு சமமாக அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறியாகவும் உள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலத்தில் குறைந்தது S தர சித்தியோடு க.பொ.த உயர்தர பரீட்சையில் கணக்கீட்டை ஒரு பாடமாக உள்ளடக்கி ஒரே அமர்வில் மூன்றுபாடங்கள் சித்தியடைந்த அனைவரும் விண்ணப்பிக்கமுடியும்.
இக்கற்கைநெறியை பூர்த்திசெய்தோர், ஆட்சேர்ப்பு நோக்கங்களுக்கான பொது நிர்வாக சுற்றறிக்கை 46/90க்கு அமைவாக, அரசாங்க பட்டதாரிகள் நியமனத்திற்குள் உள்ளீர்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
02) தகவல் தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDIT)
இது 2 ½ வருடகால கற்கை நெறியாகவும் மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் தேசிய தொழில் தகமை மட்டம் (NVQ Level) 6 இற்கு சமமாக அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறியாகவும் உள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கணிதத்திலும் ஆங்கிலத்திலும் குறைந்தது S தர சித்தியோடு க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒரே அமர்வில் எவையேனும் மூன்றுபாடங்கள் சித்தியடைந்த அனைவரும் விண்ணப்பிக்கமுடியும்.
இக்கற்கைநெறியை பூர்த்திசெய்தோருக்கு மொறட்டுவ பல்கலைகழகத்தில் BIT இறுதியாண்டு கல்வியை தொடரும் வாய்ப்பு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
03) ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDE)
இது 2 ½ வருடகால கற்கை நெறியாகவும் தேசிய மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய நியமண வாய்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய கற்கை நெறியாகவும் உள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலத்தில் குறைந்தது C தர சித்தியோடு க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒரே
அமர்வில் எவையேனும் மூன்றுபாடங்கள் சித்தியடைந்த அனைவரும் விண்ணப்பிக்கமுடியும்.
விண்ணப்பிக்கும் முறை
SLIATE மக்கள் வங்கி கணக்கிலக்கம் 025-2-001-1-3397613 இற்கு ரூபா 500/- நேரடியாக செலுத்தி (ATM அல்லது Online மூலமான பண பரிவர்த்தனைகள் ஏற்கப்படமாட்டாது) apply.sliate.ac.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து நிகழ்நிலையில் நேரடியாக விண்ணக்கலாம். வேறு முறைகளில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விரிவான மேலதிக தகவல்களை கீழே தரப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பார்வையிடலாம் அல்லது SLIATE இற்கு நேரடியாக சென்று அல்லது 065 2247519 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.
வர்த்தமானி (Gazette in Tamil) - தமிழ்
வர்த்தமானி (Gazette in English) – ஆங்கிலம்
உயர் தொழிநுட்பவியல் நிறுவகம் - SLIATE
பிரதான வீதி,
கோவில்குளம், ஆரையம்பதி,
மட்டக்களப்பு.
தொ.பே இல 065-2247519
,

No comments: