News Just In

6/14/2023 05:28:00 AM

உலகளவில் சாதனைப்படைத்த இலங்கை வைத்தியர்கள்!





உலகளவில் சாதனைப்படைத்த இலங்கை வைத்தியர்கள்

சத்திரசிகிச்சை மூலம் உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை இலங்கை வைத்தியர்கள் அகற்றியமை கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.

இந்த விடயத்தை இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த (01.06.2023) கொழும்பு இராணுவ வைத்தியசாலையிலேயே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கல் 13.372 சென்றிமீற்றர் நீளமும் 801 கிராம் எடையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் இரண்டு மிகப்பெரிய சிறுநீரகக் கற்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் 2004 இல் இந்தியாவில் அகற்றப்பட்ட 13 சென்றிமீற்றர் உடைய கல் மற்றும் 2008 இல் பாகிஸ்தானில் அகற்றப்பட்ட 620 கிராம் எடை கொண்ட கற்களுமாகும்.

எனினும் மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு கற்களை விடவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கல் பெரிது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சத்திர சிகிச்சையை சிறுநீரக வைத்தியர், கே. சுதர்ஷன், கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீர் பிரிவின் தலைவர், வைத்தியர் டபிள்யூ.பி.எஸ்.சி பத்திரத்ன மற்றும் வைத்தியர் தமாஷா பிரேமதிலக ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் வைத்தியர் யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் வைத்தியர் சி.எஸ் அபேசிங்க ஆகியோரும் மயக்க மருந்து நிபுணர்களாக பங்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: