News Just In

6/20/2023 11:57:00 AM

குரங்குவதை - வீடியோவில் பார்த்து ரசிக்கும்கூட்டம் !மனவக்கிரம் பிடித்த குழுவினர் !


பிபிசி விசாரணையில் அம்பலம்


குரங்களை இந்தோனோசியர்கள் கொலை செய்வதை வீடியோவில் பார்த்து இரசிக்கும் பலர் அமெரிக்கா பிரிட்டன் உட்பட பல நாடுகளில் உள்ளமை பிபிசி மேற்கொண்ட ஒரு வருடகால விசாரணையின் போதுதெரியவந்துள்ளது

நீண்டவால் மக்காஸ் வகை குரங்கள் கொல்லப்படுவதை பார்த்து ரசிப்பதே இவர்களின் விருப்பமாக உள்ளது.

யூடியுப்பில் குரங்குகள் சித்திரவதை செய்யப்படுவதை நேரடியாக காண்பிக்கின்றனர் பின்னர் அவை கொல்லப்படுவதை காண்பிக்கும் காட்சிகள் டெலிகிராமில் உள்ள இரகசிய குழுக்களிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன

பொலிஸார் தற்போது இவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குரங்குகள் சித்திரவதை செய்யப்படுவதை காண்பிக்கும் டெலிகிராம் குழுவில் தங்களை அடையாளம் காண்பிக்காமல் இணைந்துகொண்ட பிபிசிசெய்தியாளர்கள் இந்த விடயங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த குழுவில்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்டுள்ளனர் அவர்கள் மிகமோசமான சித்திரவதைகள் குறித்த தங்கள் எண்ணங்களை வெளியிட்டுள்ளதுடன் இந்தோனோசியா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளில் உள்ளவர்களை அதனை செய்யுமாறு கேட்டுள்ளனர்.



நீண்டவால் மக்காஸ் வகை குரஙகுகள் துன்புறுத்தப்படுவதை சித்திரவதை செய்யப்படுவதை சிலசந்தர்ப்பங்களில் கொல்லப்படுவதை வீடியோ எடுக்கும் நோக்கம் கொண்டவர்களே இந்த மனவக்கிரம் பிடித்த குழுவினர் என பிபிசி தெரிவித்துள்ளது.

பிபிசி தனது இரகசிய நடவடிக்கைகள் மூலம் குரங்குகளை இந்தோனேசியாவில் சித்திரவதை செய்பவர்களையும் அந்த வீடியோக்களை விற்பனை செய்பவர்கள் வாங்குபவர்களையும்( அமெரிக்கா) கண்டுபிடித்துள்ளது.

இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்டும் முயற்சிகளிலும் பிபிசி ஈடுபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சுமார் 20 பேர் தற்போது சர்வதேச விசாரணைகளில் சிக்குண்டுள்ளனர்.இவர்களில் பிரிட்டனை சேர்ந்த மூன்று பெண்களும் அமெரிக்காவை சேர்ந்த ஆண் ஒருவரும் உள்ளனர்.

அமெரிக்காவில் இவ்வகை வீடியோக்களை விற்பனை செய்யும் முக்கிய நபரான மைக்மக்கார்ட்டனி என்பவர் இது குறித்து பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

டெலிகிராமில் உள்ள குரங்களை சித்திரவதை செய்யும் குழுவில் இணைந்துகொண்ட தருணத்தை அவர் தெரிவித்துள்ளார்

No comments: