News Just In

6/13/2023 09:17:00 PM

புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்டத்துக்கான மக்கள் குறைதீர்க்கும் சேவையினை இன்று நடத்தினார்

புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்டத்துக்கான மக்கள் குறைதீர்க்கும் சேவையினை இன்று நடத்தினார்



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பா றை மாவட்டத்தின் மக்களின் குறைகளைஇலகுவாக தீர்த்து வைக்கும் தனது முதலாவது நடமாடும் மக்கள் சேவையை இன்று அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தினார்.

இதன் போது அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள மக்கள் கலந்து கொண்டு தமது குறைகளை முன் வைத்தனர் கல்வி கலாச்சாரம், விவசாயம் உட்கட்டமைப்பு வசதிகள்,காநிப்பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதன் போது உடன் தீர்த்து வைக்கப்படக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நடமாடும் மக்கள் சேவையில் வழங்கப்பட்டதுடன் காலம் தாழ்த்தி தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் தொடர்பாக ஏனைய அதிகாரிகளின் கவனத்திற்கு கௌரவ ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந் நடமாடும் மக்கள் சேவையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரிகளில் கற்றை நெறிகளை பூர்த்தி செய்து நியமனத்தை எதிர்பார்க்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் அம்பாரை மாவட் டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தனர்.

இதனை கேட்டறிந்து கருத்தில் கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து மாகாணத்தின் கல்விக் கல்லூரிபயிற்சிகளை பூர்த்தி செய்தவர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிப்பதற்கு தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார்.

இந் நடமாடு சேவையில் கிழக்கு மாகாண சபை பிரதமசெயலாளர் மற்றும் மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மாகாணத் திணைக்களங்களின் தலைவர்கள் மாவட்ட திணைக்களின் தலைவர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.


No comments: