News Just In

6/11/2023 06:31:00 AM

கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி!

இந்தியாவில் தமிழக மாவட்டம் நாமக்கல்லில் பெண்ணொருவர் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கரியாம்பட்டியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மோகன்ராஜ். இவருக்கு திருமணமாகி கீர்த்தனா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பவருக்கும், மோகன்ராஜின் மனைவி கீர்த்தனாவும் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக மோகன்ராஜை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

அதன்படி, மோகன்ராஜுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்நிலையில் அவர் பிழைத்துவிடக்கூடாது என நினைத்து AC மூலமாக மோகன்ராஜ் உடலில் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளனர்.

அப்போதும் அவர் உயிர்பிழைத்து விடுவாரோ என பயந்து தலையணையால் அழுத்தி மோகன்ராஜை கொலை செய்துள்ளனர்.

மேலும் பொலிஸார் கீர்த்தனா மற்றும் கதிரேசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments: