News Just In

6/30/2023 06:24:00 PM

இலங்கை தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டாரில் சடலமாக மீட்பு!

கட்டாரில் வேலை வாய்ப்புக்காக சென்ற, முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இரு இளைஞர்களும் காட்டாரில் தங்கியிருந்த இடத்திலேயே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவர், விசுவமடு – இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை உயிரிழந்த மற்றைய இளைஞர் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

No comments: