News Just In

6/21/2023 07:50:00 AM

அஸ்வசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் 2.3 மில்லியன் பேர் உதவிகள் பெற தகுதி!

அஸ்வசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் 2.3 மில்லியன் பேர் தகுதியான பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

தகுதியுடைய பயனாளிகளின் பட்டியல் வெளியீடு நேற்று (20) நிதி அமைச்சில் இடம்பெற்றதுடன், இந்தப் பட்டியல் இன்று முதல் பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராம சேவைக் அலுவலகங்கள் மட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.

இதன்படி, இன்று (21ஆம் திகதி) முதல் 10 நாட்களுக்கு ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த குழுவிற்கு 208 பில்லியன் ரூபாய்கள் நலன்புரி உதவியாக வழங்க மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஜூலை மாதம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த பணம் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நலன்புரி பலன் வாரியத்தால் தொடர்புடைய கணக்கில் வரவு வைக்கப்படும். நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, ​​நிதி அமைச்சின் பதில் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன, நலன்புரி நல வாரியத்தின் தலைவர் பி. விஜேரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments: